பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உத்தராயணம் மாடியில் உடம்பை கீட்டுகிறேன். ஆ! இஸ் திஸ் பியூட்டிபுல்! தோள்மேல் சுதந்திரமாய்ப் போட்ட கைப்போல், தண்டவாளம், எட்ட, தொடுவானை அனைத்து ஒடு கிறது. - திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள், பிய்ந்த இதழ்கள், மூச்சுவிடும் விண்மீன்கள், சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள், வைரச்சிதறல்கள், உறைந்துபோன கண்ணிர்த் துளிகள்-இதய உதிரிகள் - இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச்சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோவிலில் விதவிதமான காய் கறிகளைக் கட்டித் தொங்கவிட்டு ஒரு உற்சவமாமே! அது மாதிரி- - -என் பையல் பருவத்தில், நான் வளர்த்த ஒரு குச்சுகாயின் சடைமறைத்த முகம்; -இளம் வயதில் மரித்த என் தம்பி; -fதி கெளளையின் ஒரு சொகுஸ வளைவு: -ஹரிணி கொடியாயிருந்த நாளில் அவள் கூந்தலி லிருந்து பிய்த்தெறிந்த தாழம்பூ மடல், -இரவுவேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கை யில் விட்டுச் செல்லும் துறைத் துளிகள். பொரியும் முத்துக் கொதிகள்: -டெலிபோன் மணியோசை; -தச்சன் இழைப்புளியிலிருந்து கூடம்பூரா சிதறும் மரச் சுருள்கள்;