பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 உத்தராயணம் இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் கான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ? - ஏணி சிலை பிசகி, ஏணியோடு, சேகர் வெட்டிச் சுவரோரமாய்ப் பரப்பி வைத்திருக்கும் முள்படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து முட்கள் வாழைப்பழத்தில் ஏறுவதுபோல் முதுகில், பின் மண்டையில், சப்பையில் நுழைகையில் என்னையறி யாமல் வீறலில் வாய் திறந்தது. ஆனால் சத்தம்வரவில்லை, ஒருக்களிக்க முயன்றேன். முடியவில்லை. இடது பக்கம் மறுத்துவிட்டது l Ohmy God வாய் பொத்திய ரிசப்தம். பயத்தில் இலை கூட அசையவில்லை. எனக்கு என்ன நேர்ந்து விட்டது. No No. No. பல்லிவாயில் தும்பிபோல், வார்த்தைகள், அலறல்கள் தொண்டைக்குள் இறக்கையடித்துக் கொண்டன. இனி என்ன? சாந்தியும் ஹரிணியும் வரும்வரை இங்கேதானா? வந்தாலும் அவர்கள் என்னை அவர்களிடையே துரக்கிக் கொண்டு போய் உள்ளே சேர்க்க முடியுமா? முடியாவிட்டால், இரவு பூரா இங்கேயே இப்படித் தானா? Tommy எங்கிருந்தோ ஓடிவந்து என் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட் கார்ந்து, மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை இதுவேதான் என் உத்தராயணமா? தூரத்தில் சிரிப்பு கேட்கிறது.