பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் இரண்டாவது உலகயுத்த சமயத்தில், அது பற்றி இருந்த அப்போதைய மன நிலையில் இக் கதை உருவாகியது. மனிதாபிமானமும், சமுதாய போராட்டமும் என் எழுத்த்தில் பிரதிபலிக்கவில்லை என்று என் மேல் ஒரு புகார்உண்டு. மனிதாபிமானம் என்றால் தனியாகத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு மேலி ருந்து இறங்குமா? அறியேன். 'எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான்- எல் லாரும் தோத்தாங்க; எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப் பட்டான், ஜெயிச்சவனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக் கிறாப்போல சண்டை போட்டதிலும் கொறைச் சவில்லே. காள் பாத்ததிலே கொறைச்சலில்லே. பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி!' தொகுதி: ஜனணி குழந்தையின் வீறலைக் கேட்டு கிணற்றின் பிடிச் சுவரின்மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டுவிட்டு, உள்ளே ஓடி வந்து குழந்தையை வாரி னான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது. அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை சின்ன மாவுப் பொம்மை போல் தானிருந்தது. இழுத்துப்