பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 அரவான். 'வந்து ட்டியா?" 'வராமே? சாக்கடைத் தண்ணிக்குப் போக்கெடம் ஏது? என்னா கொளங்தையெ அளவிட்டுட்டியே. இதான் சாமார்த்தியமா? கொடு இப்படி-’’ கோபம் அவன் வாயை அடைத்துவிட்டது. ஆளைத் தாக்கி எறிஞ்சு பேசறதுலே அவுங்களுக்கு சிகர் அவுங்க தான். ஒண்னு முதுகிலே வெச்சா சரியாப்போயிடும். என்ன தைரியமா கேக்கறா பாரு! இருக்கட்டும். இப்போ கொளங்தைக்கிப் பசி அடங்கட்டும். அதான் இப்போ முக்கியம். அவளுக்குத்தான் அந்த எண்ணமில்லேன்னா நமக்குக் கூடவா இல்லே! நான் பெத்த மகன்." அந்த ஆள் அப்பொழுதே போய்விட்டான். அவள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தையை எடுத்து விட்டுக் கொண்டே கேட்டாள். 'நீ எங்கயாவது புளைப்புத் தேடினயா? என்ன வாச்சு? அவள் கேள்விக்குப் பதில், அவன் முக வாட்டத் திலேயே கிடைத்து விட்டது. - 'இண்ணக்கி கடைத்தெருவைச் சுத்தினேன். சித்தாள் வேனுமான்னு கடைகடையா ஏறிக் கேட்டேன். ஒவ்வொருத்தன் என்னென்ன சொல்றான்கறே:- எதோ வேலையில்லேன்னு சொல்லிக் களிச்சால் போச்சு. எடக் காகப் பேசறான்க! - 'சித்தாள் வேலையா? இங்கே இருக்கிறவனே ஈ ஒட்டறான்! யுத்தம் வந்தாலும் வந்தது, என்ன சாமான் இங்கே இருக்குது வியாபாரம் பண்ண? என்கிறான் ஒருத்தன்.