பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


vi கலகம் முறியடிக்கப்பட்டு, Spartacts சிலுவையில் அறையப் பட்டான்.) - பொது உடைமைத் தத்துவத்தைச் சார்ந்து இருப்ப தாகக் கருதப்பட்டதால், பதிப்பாளர்கள் நாவலைப் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் Fast, நன்றாக ஊன்றிக் கொண்ட எழுத்தாளன் தான். ஆனால் அவன் பாச்சா பலிக்கவில்லை. Fast, தினசரிகளில் ஒரு விளம்பரம் விடுத்தான். பிரசுரகர்த்தாக்களின் முரண்டலைச் சொல்லி, புத்தகத்தை வெளிக் கொண்டுவர ஆகும் செலவைத் தோராயமாய்க் கணக்கிட்டு, அதன்படி ஒரு பிரதிக்கு வைக்கக் கூடிய விற்பனை விலையைக் குறிப்பிட்டு, தானே புத்தகத்தை வெளியிடப் பணம் உதவுமாறு பொதுமக்களை வேண்டிக் கொண்டான். உடனே தொகைகள் வந்து குவிந்தன. சிறு துளி பெரு வெள்ளம் புரண்டு, புத்தகமும் வெளியாகி, ஒருவகையில் வாசகனே வெளிக்கொண்டு வந்த புத்தகம் என்கிற காரணத்தில் அமோக வெற்றி கண்டது; அதே சமயத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே லகrயமான உறவுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்துவிட்டது. தம்பி, உன்னையும் என்னையும் பற்றி, இக்காட்டில் அந்த முறையில் பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா? எழுதுவது, எழுதினதைப் புத்தகமாக உருவாக்குவது, வெளியான புத்தகத்தை வாசிப்பது-அத்தனையும் கலை தான். ஆனால் புத்தக ப்ரசுரம் ஒரு தொழில், முதலீடு கணிசமாகக் கேட்கும் தொழில், புத்தக வியாபாரம், அதன்