பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荡8 அரவான் யாட்டமா ஒரு பெரியநாய் என்னைப் பாத்து ஓடிவந்துது. அந்த ஆள் அதை விரட்டிட்டு என்னை வாசல் தாவாரத் திலே சிறுத்தி வச்சுட்டு உள்ளே போனான். “கொஞ்ச நேரம் பொறுத்து மூணு பொம்புள்ளைங்க உள்ளேருந்து வந்தாங்க பாப்பாரு. பணக்காரு. நகையும் கட்டும் நல்ல புடவையும் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங் களுக்குள்ளே என்னவோ வெள்ளைக்காரன் பாஷைலே பேசிக்கிட்டாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு பெரிய அம்மா இருந்தாங்க. அந்த ஆள் என்னை மொதமொதல்லே விசா ரிச்ச மாதிரியே, அவுங்களும் விசாரிச்சாங்க, இன்னும் ஒன்னுரெண்டு பொம்புள்ளே விஷயங்கூட விசாரிச்சாங்க. அப்புறம் அங்கேயே குந்தவெச்சு, ஆளு வந்து சோறு போட்டான், குளுகுளுன்னு பழஞ்சோறு, என் வயிறு குளுந்துது. ஒன்னே கெனச்சுக்கிட்டேன். 'கை கழுவி, தண்ணி யேந்திக் குடிச்சுட்டு, முக்தானை யிலே கையைத் தொடச்சிக்கிட்டேன். உடனே இங்கிலி ஸ்-லே என்னவோ பேசினாங்க. பொம்புள்ளேங்க ஆம்புள்ளே மாதிரி இங்கிவீஸ் பேசி இண்ணக்கித்தான் கான் பார்த்தேன். உடனே ஒரு அம்மா உள்ளே போய் ஒரு குளங்தையை ஏந்திவந்து என் மடியிலே வெச்சு, 'பாலைக் கொடு இன்னாங்க. "எப்படி மாட்டேன்றது. சோறு போட்டிருக்காங் களே! உப்புக் தண்ணியும் உலர்ந்த வயத்திலே ஊத்தியிருக் காங்களே' "குளங்தையா அது நம்ம ஊரிலே முருங்க மரத்துலே இடையன் கொம்பு ஊறல்லே? அது மாதிரி ஒரே குச்சியா, உயிர் தொண்டையிலே நாலாட்டமா ஓடிக்கிட்டிருக்குது. தொடவே அச்சமா யிருந்திச்சு. -