2
அந்தக் குழந்தையின் பசியை ஆண்பிள்ளை தானாக எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்? அவள் மாலையில் வந்து ஒரு வேளை ஊட்டுவாள்; காலையில் மாவையும் தண்ணிரையும் கரைத்துப் புட்டியில் போட்டுவிட்டுப் போவாள். புட்டியை எந்தப் பக்கம் குழந்தையின் வாயில் வைப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது.
'காலைலே வேலைக்கு அலையனும். கொளங் தையைத் தனியா விட்டுட்டு எத்தனை நேரம் வெளியிலே சுத்த முடியும் மாலை வறது எப்போ? அவள் வநது எப்போ? அந்தக் கொளங்தையை அவள் மார்மேலே அணைப்பது எப்போ தொண்டையைக் கிளிச்சுக்கிட்டு ஒயாமெ அலறும் அதன் அலறல் ஒயறது எப்போ? ஒரே வேள்ையானாலும் பெரிய வேளை!’
இன்று அவள் குழந்தை தலைமீது மேலாக்கைப் போட்டு முடியும் அதன் கத்தல் ஓயவில்லை. அவனுக்கு வயிறு கொதித்தது.
‘என் ஏமாத்தறே? நீ வந்து ஊட்டறது ஒரு வேளை. அதிலே. ஏன் வஞ்சனை பண்ணறே? பங்களா வீட்டுப் பையன் மாதிரியில்லையா பெத்த மவன்?”
"ஏன் இப்படியெல்லாம் பேசறே? நான் என்ன பண்ணுவேன்? அந்தப் பையன் என்னை அட்டை மாதிரி உறிஞ்சிப் போடுதே. ஊறக்கூட நேரம் விடமாட்டேன் னுதே. மூக்காலே பாலு வந்தாலும் வச்ச வாய்க்கடி விடமாட்டேன்னுதே'
"இங்கேயும் இருக்குதேன்னு கொஞ்சம் வெச்சுக்கிட்டு வர்றது.'
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/76
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
