பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§4. அரவான் “அவங்கதான் என் எதிரேயே உக்காந்து கவுனிக் கிறாங்களே! மடியிலே புள்ளையை விட்டுட்டு அந்தப் பெரியம்மா என் எதிரே சட்டமா குந்திக்கறாங்க..கொடுடீ கொடுஉ; குழந்தைக்குக் கொடுடீ. இந்தப் பக்கம் வத்திப் போனா அந்தப் பக்கம் மாத்திப் போட்டுக்கோ’ண்ணு ஈவு இரக்கமில்லாமெ பேசறாங்க." சோத்திலே நெய்யைக் கைநிறையா அள்ளித்தானே விடறேன்! ஆப்பிள் பழமும் ஆரஞ்சிப் பழமுமா வாங்கி வாங்கிக் கொடுக்கல்லே! என் எதிரிலேயே உரிச்சித் தின்னுடனும் என் குழந்தைக்கு ஊறும்பாலை என் குழந்தைதான் குடிக்கனும், என் வீட்டுக்கே ஒரு குழந்தைடீ

  • அவுங்க விதவிதமாத் தீனி வாங்கிப் போடறாங்க; சொகம் சேக்கரசங்க. ஆசை உனக்கு அங்கேதான் பொங்கு தாக்கும்!” .

"ஏன் இப்படி சொல்றே? அங்கே துண்றது விஷமாயி ருக்குது போதாதுன்னு நீ வேறே இங்கே வந்தா விஷத்தைக் கக்கனுமா? என் வவுத்திலே சுமந்த என் குளங்தையை நான் மறந்துட்டேன்னு நீ எனக்குப் போதிக்கவேணாம்-' ‘அடிபோடி பாவி-' 3 அவன் தெருவில் மனம்போனபடி போய்க் கொண்டிருக் தான். அந்த ஒரு வாரத்துக்குள் அவனுக்கும் அவளுக்கும் பேச்சு பட்டென அறுத்து போயிற்று. அவன் கண்ணெதிரே