பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


G)ff's F » s’ifs 65 படிப்படியாய் அவன் குழந்தை தேய்ந்துபோகும் கோரம் காணக் காண அவனுக்குச் சகிக்க முடியவில்லை. அவள்மேல் குற்றமில்லை என்று அவன் மனம் புரியாமலே அறிந்தது. இருந்தும் அவள் தனக்காகச் செய்யும் தியாகம் அருவருப்பையும் பயங்கரத்தையும் தான் விளைவித்தது, அவ்விருவருக்காக அக்குழந்தை தியாகம்... ஒரொரு சமயம் அவள் அவ்வீட்டில் எஞ்சிய ஆகாரங் களை அவன் சாப்பிடுவதற்காகக் கொண்டு வருவாள். அதைச் சீந்தக்கூட அவன் மனம் சிலிர்க்க ஆரம்பித்து விட்டது. சி! இதுவும் ஒரு புளைப்பா இப்படி இந்த உசிரையும் உடலையும் ஒண்ணாத்தான் வெச்சு வாளாமே இருந்தா தான் என்ன? -டேய், நாட்டுப்புறம் எங்கே பார்த்துக் கிட்டுப் போறே? வண்டியிலே மாட்டிக்கிட்டு சாவறத்துக்கா? சாவணும்னா சண்டையிலே போய் சாவறது தானே!" டாணாக்காரன் போட்ட அதட்டல் அவன் மனசில் அசரீரி மாதிரி பாய்ந்தது. இந்த யோசனை எனக்கு என் அப்பவே தோணலே! சம்பளத்தை அவ பேருக்கு எளுதி வெச்சோம்னா அவ அந்த வீட்டிலே போய் சாகவேணாம்: சம்பளத்தை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு அவ கிம்மதியா யிருப்பா. கம்ப மவனாவது புளைப்பான். திரும்பி வந்தா பார்ப்போமில்லியா?” -'திரும்பி வராமெ போனா?” -'திரும்பி வராமெ போனாலும் கம்ப மவன் இருப் பான், இல்லியா!' பா-5