66 அரவான்
அவன் மனசிலேயே ஒரு பெரும் கனம் குறைந்தது. சந்தோஷம்கூடப் பிறந்தது. அந்தப் போலீஸ்காரனை அணுகினான்.
'சண்டையிலே சேக்கற ஆபீஸுக்கு வளி எந்தப் பக்கம்?’’
4
அவன் திரும்பிவரும் வேளைக்குள் அஸ்தமித்து விட்டது. குழந்தையை கினைத்துக் கொண்டே அவன் ஓடோடி வந்தான். இன்றைக்கென்று அவள் அவனுக்கு முன்னாலேயே வந்திருக்தாள்; அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகம் மாறித் திகில் பிடித்துப் போயிருந்தது. "ஐயோ, கொளங்தையைப் பாரேன்!' என்றாள் கையைப் பிசைந்துகொண்டே. அவனுக்கு அடிவயிற்றில் சுரி' லென்று ஜில்லிட்டது. உள்ளே ஓடினான். அதன் காதில் ஒரு நூல் ரத்தம் வழிந்திருந்தது. வயிறு உப்பி...
அதன் அருகே உட்கார்ந்தான். அவளும் குழந்தையின் அந்தண்டைப் பக்கம் உட்கார்ந்து கொண்டாள். ஆனால் அதை அவன் உணர்ந்தானே யொழிய, காணவில்லை. அவன் பார்வை குழந்தையின்மேல் சிலை குத்திப்போயி ருந்தது.
“என்ன சுருக்கனா வந்துட்டே?”
'எனக்கு இன்னிக்கு மனம் தாளலே. சண்டை போட்டுகிட்டு வந்துட்டேன்.”
அவளும் சண்டை போட்டுக்கொண்டு வந்து விட்டாள். அவனும் சண்டையிலேபோய்ச் சேர்ந்து விட்டான். ஆனால் பிரயோசனம் என்ன? ஒன்றுமில்லை.
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/79
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
