பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డ}f • శF Trra 71 எங்கே யிருக்கிறோம்?" ‘எங்கிருந்து வந்தோம்?" எதற்காக வந்தோம்!" எங்கே போகிறோம்?" ‘இனி வரப்போவது என்ன?” சில சமயங்களில் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்ததும், சமயமும் சம்பந்தமுமற்று, அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி, தாமே தம்மைத் தனித் தனித் தொடர்புகளுடன் பெருக்கிக் கொண்டு விடு கின்றன. ‘எங்கிருந்து வந்தாய்?’-திடீரென்று அவனுள் வளிருந்து ஏதோ பிரிந்து, எதிரில் கின்று கொண்டு, அவன் கேள்வியை அவனையே திருப்பிக் கேட்பதை உணர்ந்தான். உடனே அவனுக்கிஷ்டத்துடனோ, இஷ்டமில்லாமலோ, அக் கேள்விக்குப் பதிலை அவனிடமிருந்து, அது பன்னிப் பன்னிக் கேட்கும் முறையிலேயே கட்டாயப் படுத்திற்று. ‘எங்கிருந்து வந்தாய்?’’ “புற்று புற்று! புற்றுi'-ஒரே வார்த்தை அவன் கண்ணெதிரில் மாறி மாறிச் சுற்றி வந்தது. அதன் சப்தம் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. “புற்று புற்று புற்று! நீ புற்று நான் புற்று! எல்லாம் புற்று! உலகமே புற்று புற்று, புற்று' 'அடே உன்னைப் புத்துக்குப் பால் வாத்துப் பெத்தேண்டா!'-இங்கு அவன் தாயின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டான்.