பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7g புற்று "அடே, என் வயிறு திறந்த வேளை என்ன வேளையடா?’’ சின்னப் பையனாயிருக்கையில், துஷ்டப் பையனா யிருக்கையில், கெட்ட சகவாசம் பண்ணிப்பண்ணி ஊர்ச் சண்டையை எல்லாம் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகையில், அவன் தாய் கஷ்டம் தாங்காமல் இப்படிச் சலித்துக் கொள்வாள். இதைக் கேட்டுக் கேட்டு அலுத்து ஒருநாள், எந்தப் புத்துக்குப் பால் வார்த்தாய், அம்மா?” என்று இடம் கேட்டுத் தெரிந்துகொண்டு- என்ன ஆச்சரியம்-தன்னையே சின்னப் பையனாய், இதே இடத்தில், அதோ மரத்தடியில் ஓங்கி வளர்ந்திருக்கும் புற்றை, அதற்குச் சற்றுத் தொலைவில் மேட்டு கிலத்தில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு சுவாரஸ்யமாய்க் கவனிப் பதைக் கண்ணெதிரில் கண்டான் கிழிந்த அழுக்குச் சட்டையுடனும், அரை நிஜாருடனும், இடுப்பில் செருகிய கவனுடனும், முழங்கையை கிலத்தில் ஊன்றி, மோவாயைக் கையில் ஊன்றி, புற்றில் என்ன கேரப் போகிறதெனச் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண் டிருந்தான். ஆனால் அவன் என்ன நினைத்தானோ, எதுவும் நேர வில்லை! ஒரே நிசப்தம்தான் நிலவியது. சுற்று முற்றும் வயல்களும், ஏரிக்கரை மேட்டில் இருபுறமும் பனை வரிசை களுக்கிடையில் ஒற்றையடிப் பாதையும், களத்து மேட்டில் வைக்கோற் போரும்......... கொஞ்ச நாழிகை காத்திருந்தான்; பிறகு கையும் காலும் சும்மாயிருக்கவில்லை. அதுவும் கையில் கவண் இருக்கையில் உருண்டைக் கல்லாய் ஒன்று பார்த்துப் பொறுக்கி, குறி பார்த்து லேசாய் அடித்தான். மண் கொஞ்சம் உதிர்ந்தது. உள்ளிருந்து படத்தை விரித்துக் கொண்டு ஒரு தலை எட்டிப் பார்த்தது. கண்களில் சிந்தும்