பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii சக்திக்க நேரிடுகிறது. அலமாரியிலிருந்து அதை யெடுத்து, அதில் என் கையொப்பத்தைப் பெருமை யுடன் எனக்குக் காட்டி அலமாரியில், பக்தியுடன், மீண்டும் சேர்த்த பின், என் வாசகன் அலமாரியை இழுத்துப் பூட்டு கிறான். கதவுதிறந்து மூடிய நேரத்துக்கு அலமாரியிலிருந்து குங்குமப்பூ மணம் கமகம- - வெட்கத்தில் தலைகுனிகிறேன். ஏனெனில் என்னிடத் தில் ஒரு பிரதி கூட இல்லை. புத்தகத்தைக் கடனாகக் கேட்கக் கூடக் கூசுகிறது. சரி, இது போகட்டும். பதிப்பாளர்கள், அவர்கள் பிரச்சனைகளை அவர்களே சொல்லக் கேட்கும்போது, அவை பூதம் காட்டுகின்றன. ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு, அவைகளை விற்பனைப் படுத்த அவர்கள் படும்பாடு-கேட்க அதைரியமாகவே இருக்கிறது. வியாபார நோக்கோடு மட்டும் இல்லாமல் உண்மையான எழுத்தார்வம் கொண்ட பதிப்பாளன், எழுத்தாளனுடைய பாக்கியம், பூஜாபலன், உழவன் லாபக் கணக்குப் பார்க்கிற மாதிரியான இந்த ப்ரசுரத்தொழிலில் உங்களுக்காக ஈடுபடுகிறோமே, அதுவே எங்கள் கலை ஆர்வத்துக்கு சாr என்று கட்சி கட்டுவோர்களும் இருக் கிறார்கள். எங்களுக்குப் பேசவே வழியில்லை. தம்பி, இங்குதான் உன்னோடு என் வழக்கு வரு கிறது. தமிழ காட்டின் ஆறு கோடி மக்களில், ஒரு எழுத் தாளனுக்கு அவன் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கிப் படிக்க ஆயிரம் பேர் இல்லையா? நம்பும்படி இருக்கிறதா? இது யாருக்கு அவமானம், வாசகனுக்கா, எழுத்தாள னுக்கா? ஐம்பத்திரண்டு வருடங்களுக்கும் மேல் எழுத்தில்