பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


GR) ff. F » stoff . 77 சாப்பாடுமில்லாமல், தூக்கதுமில்லாது, செய்யாத குற்றத்திற்குப் பட்ட் அவமானத்தில் இரவு முழுவதும் பொருமிப் பொருமி, அவனுள் என்ன நேர்ந்ததோ. அன்று மறுநாள் முதல் மெய்யாகவே திருடத் தலைப் பட்டான். - ஆத்திரத்துக்காகத் திருட்டு; முதலில் சின்னச் சின்னத் திருட்டு; சிங்காரத் திருட்டு, சாமான்களுக்காகத் திருட்டு; பிறகு திருட்டுக்காகத் திருட்டு; அந்தச் சமயத்து நெஞ்சுப் படபடப்பும், இரத்தம் உடலில் குதித்துப் பாயும் ஆனந்தத் திற்காகவும் திருட்டு! - - போகப்போக வெறும் திருட்டுடன் அவன் பழக்கங்கள் கிற்கவில்லை. புதுப்புதுப் பழக்கங்கள்; புதுப்புது இன்பங் கள். இன்பத்தின் புதுமை; புதுமையின் இன்பம். அதுவும் பிறருக்கு இழைக்கும் துன்பத்தின் இன்பம். அவன் செய்கைகளால் பிறர்படும் சங்கடத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அவர்கள் மேல் இருந்த கரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் போயிற்று. நாளடைவில் அவன்மார்புள் ஏதோ கனமாய் இறங்கி, பிறகு அங்கே கெட்டிப்படுவது போல்கூட அவனுக்குத் தோன்றியது. துளித் துளியாய், படிப்படியாகத்தான்- ஆனால் நிச்சயமாய். அவனை ஒருவராலும் அடக்க முடியவில்லை.

ஐயோ, நீ எனக்கு ஒரே பிள்ளைடா! உங்கப்பா கூட இப்போ இல்லேடா. என் பேரைக் கெடுக்காதேடா. நான் கண் மூடுகிறவரையிலுமாவது சரியாய் இரேண்டா-, என்று கண்ணிர் வழிந்தோட, அம்மா மன்றாடுவாள். இருந்து இருந்து, தவங்கிடந்து ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றாலும், பையன் பிறந்தர்ாசி, குடும்பம் திடி ரென rண தசை யடைந்துவிட்டது. கணவன், திடீரென ஜூரம் அடித்து, கடுத்தர வயதிலேயே காலமானார்,