பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Q}f 字・ff・ 84 அப்புற்று முன்பைவிட இப்பொழுது மிகவும் வளர்ந்து விட்டது. உயரமும் அதிகம். சிறுசிறு மண் குன்றுக் தொடர்கள் ஓங்கி கின்றன. அவைகள் தாமே வளருங் தன்மைதான் என்ன? அவைகளின் உள் பக்கம் எப்படி யிருக்கும்? எதுவரை தான் போகும்? அதன் உள் இருள் எவ்வளவு ஆச்சரியமானதாய் இருக்கும்? அந்த உள் இரு ளுடன் ஐக்கியமாய்விடின்-1 மண்டையை வெடித்துக்கொண்டு கிளம்ப முயன்றா லும், அதற்கு மேல் இடமில்லாததால் யோசனை எட்ட மறுத்துவிடும். பெரு மூச்செறிந்து திரும்புவான். . போகப் போகக் குருக்கள் பையன் சமாசாரம் தாங்கக் கூடியதாயில்லை. திடீரென்று ஒரு நாள் ஒரு கூட்டம் திரண்டு வீட்டு வாயிலையடைந்தது, ஏக இரைச்சலுடன். அப்பொழுது அவன் வீட்டில் இல்லை. தாய்தான் இருக் தாள். அரவங் கேட்டு, அடுப்பங்கரையிலிருந்து கைச் சாமானோடு ஓடிவந்தாள். குழம்புக்குப் புளியைக் கரைத் துக்கொண்டிருக்தாள். கும்பலைப் பார்த்ததும் வயிற்றில் புளியைக் கரைத்தது. கூட்டத்தின் திரண்ட கோபாவேசத் தில், அவ்விடத்தில் ஆடிய காற்றே விறுவிறுத்தது. ஆரவாரத்திலிருந்து ஒரு குரல் பிரிந்து வந்தது. அதன் சப்தம் அவள் மேல் மோதியது. பெரியம்மா-இனிமேல் உங்கள் பையன் கோவில்படி தாண்டினால், நாங்கள் காலை ஒடித்துப் போட்டு விடு வோம்-உங்கள் பையனை நீங்கள் இனி பார்த்துக் கொள் ளுங்கள். பிறகு எங்களைக் குறை சொல்ல வேண்டாம்-' "ஐயோ இப்போ என்ன நடந்துடுத்து?" கையில் பாத்திரத்தை எந்திக்கொண்டு வாசம் குறட்டில், ஒண்டியாய் அவர்கள் எதிரில் சிற்கையில் அவளைப் பார்க்கப் பரிதாபமா யிருந்தது. սր-6