பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புற்று 'உங்கள் பையனும் இன்னும் நாலு சோம்பேறிகளு மாய்ச் சேர்ந்து, நேற்று ராத்திரி, எருவுக்காகக் கழனியில் மடக்கிவிட்டிருந்த ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக் குட்டியைப் பிடித்து, ஏதோ வெங்காயம், வேர்கடலை, பலாக்கொட்டை சுடுவதுபோல், நடுவயலில் குழியை வெட்டி நெருப்பை மூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார் களாம், இந்த அக்கிரமம் எங்கே அடுக்கும் பிராமணப் பிள்ளையாய்ப் பிறந்துவிட்டு இந்த மாதிரி பண்ணிப்பிட்டு, கோவிலில் மணியாட்ட வந்துவிட்டால், ஊர் உருப்பட்டு விடுமா?’’ அவளுக்கு உடல் பரபரத்தது: "இன்னிக்கு எனக் காச்சு, அவனுக்காச்சு. நான் கவனிச்சுக்கறேன். நானே உங்களுக்குச் சொல்கிறேன். அவனைக் கோவிலில் சேர்க்கா தீர்கள். இன்றையிலிருந்து பூஜைக்கு வேறு ஏற்பாடு பண்ணிக் கொள்ளுங்கள்.' அவன் வீட்டுக்கு வருகையில் அவள் பூஜையில் உட் கார்ந்திருக்கிறாள். கட்டுக் கட்டாய் விபூதியணிந்து, துல்லி யமான வெண்மை யுடுத்தி, சிவப் பழமாய் மணையில் உட் கார்ந்திருந்தாள். எதிரே கோலத்தின்மேல் பூஜை சம்புடம் இருந்தது. அடே! இங்கே வா-’’ அவள் குரல் அவளுக்கே கணி'ரென்றது. அவன் மெளனமாய் வந்து கின்றான். புருவங்கள் வினாவில் கெரிங் தன. இடமே இருவரின் அந்த பலத்தின் வேகத்தில் சிலிர்த்தது. இரு குஸ்திக் காரர்கள், தாக்குவதற்குமுன் ஒருவர் பலத்தை யொருவர் வெறும் கண்ணோட்டத் திலேயே ஆராய்வது போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கின்றனர். - .