பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச், ரர். 83 'இப்போ கான் பூஜையில் உட்கார்ந்திண்டிருக்கேன் அதனாலே என் வாயால் சொல்லக்கூட அஞ்சறேன். ஆனால் இன்னிக்கு உன்னைப் பத்தி நான் கேள்விப்பட்டது வாஸ்தவமா?" அவன் முகம் சஞ்சலிக்கவில்லை; சிந்தனையில் ஆழ்ந் தது. அவனுடைய மெளனத்தால்தான் குழப்பம் உண்டா கியது. தன் மகனா யிருப்பினும் அவனை அறியமுடியாதது அவளுக்குப் பெருந் தோல்வியாயும் ஆத்திரமாயு மிருந்தது. 'நான் எதைக் குறிச்சுக் கேக்கறேன்னு புரியறதா?” புன்னகை புரிந்தான் புரியாமல் என்ன?” என்ன சொல்றே?” "உனக்கு என்ன தோன்றுகிறது?’’ இப்பொழுது அவன்தான் பூனை; அவள்தான் எலியாக. அவன் திடீ ரென்று மாற்றியதும், அவள் தன்னை அடக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் எல்லாம் பறந்தன.

  • அடே, இந்தச் சங்குப்பாலைக் கையிலே வெச்சுண்டு சொல்றேன்-கீ அழிஞ்சி போயிடுவே-என் வயிறு எரியக் காணாதே-'

அவன் குரலும் பதிலும் அமைதியாய்த்தானிருந்தன'மற்றவாள் என்னை அழிக்கறதைவிட கானா அழிஞ்சு போறது மேல் இல்லையா? அதுவே ஒரு வைராக்கியந்தான், அம்மா-அதற்கு ஒரு சத்தியமுண்டு-’’ அம்மாவுக்கு உச்சி மண்டை இரத்தத்தில் முத்துக் கொதிகள் வந்தன. தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினாள்: "அழிஞ்சேதான் போயிடுவே. கான்தான் சொல் றேனே-"