பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒ;r, ச, , 65 ஒடு ஆச்சரியமாய்த் தானிருந்தது. கிட்ட நெருங்க நெருங்க விட்டின் தேக்க மெளனம் வாய்விட்டு அலறியது. வெறுமெனச் சாத்தியிருந்த வாசற்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றதும் இருட்டில் ஏதோ கனமாய் அவன்மேல் உராய்ந்து ஆடியது. காலின் கீழ் ஏதோ தடுக் கியது. பிடரி குறு குறுத்தது. சட்டென நெருப்புக் குச்சி யைக் கிழித்தான்-அம்மா ரேழி விட்டத்திலிருந்து கயிற் றில் தொங்கிக் கொண்டிருந்தாள். காலடியில் ஒரு பித்தளை அடுக்கு உருண்டோடி யிருந்தது. அப்பொழுதாவது கலங்கியதோ மனம் என அவனையு மறியாமல் தன்னை ஆராய்கையில், அதில் ஏதோ ஒரு எண்ணம் லேசாய் மின்வெட்டுப் போல் பாய்ந்து மறைக் தி.தி: சே, இன்னுங் கொஞ்ச நாளிருந்தால் தானாகவே செத்துப் போயிருக்கலாமே!” அன்றிரவே, அவ்வூர் மண்ணை உள்ளங்காலினின்றும் உதறிக்கொண்டு நடந்தான். 演 'பிறகு எங்கே போனாய்?” அவனின்றும் பிரிந்த அது அவனுக்கிடும் தீர்மானமான கேள்விக்குப் பணிவுடன் பதில் சொல்லிக்கொண்டு போனான். ‘போனேன். போய்க் கொண்டே யிருந்தேன். கையி லிருந்த ஒன்று அரைக் காசும் செலவழிந்து போயிற்று, திருடித் தின்னவாவது தோன்றிற்றே தவிர, பிச்சை கேட்க மனம் மானம் பார்த்தது.