பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புற்று 'மூன்று நாள் பட்டினி. கடைசியில் எங்கோ போய், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, பனங் கொடுக்காமல் கழுவப் பார்க்கையில், கல்லாப் பெட்டியிலிருந்த முதலாளி மலை போன்ற சரீரத்தைத் தாக்கிக் கொண்டு எழுந்து வந்து கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். பீடி, இரும்புப் பிடியாய் இருந்தது. மரியாதையாய்ப் பணத்தை வெச்சிட்டுப்போ. இல்லாட்டா தின்னத்துக்குக் கூலியாக வேலை செஞ்சிட்டுப் போ... இரண்டு ஈடு உளுந்து இருக்கு, அரைச்சுக் கொடுத்துட்டுப் போ...' என்றான். "என்ன செய்வது? அரைத்துக் கொடுத்தேன். பிறகு அப்போதைக்கு வயிற்றுப் பாடு பெரும் பாடா யிருந்ததாலும், அவனுக்கும் ஒரு ஆள்வேண்டி யிருந்த தாலும் அங்கேயே அது சாக்கில் வேலைக்கு தங்கி விட்டேன். "ஆனால் அவனிடம் கான் வகையாய் மாட்டிக் கொண்டேன். தொட்டதற் கெல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருப்பான். ஆட்களைப் பம்பரமாய்ச் சுழற்றி வேலை வாங்குவான். கடைக்கு மாத்திரம் முதலாளியில்லை. அவன்; தொழிலிலேயே அவன் முதல்தான்! அவன் சமையலுக்கும் பட்சணங்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி. இங்கே கலியாணம், அங்கே பிறந்தநாள், இங்கே டீ பார்ட்டி, அங்கே விருந்து-என்று எப்பொழுதுமே கிராக்கி. அப்போதெல்லாம், அவனேடு அவன் பரிவாரம்-அதில் நானும்-கரண்டிகளையும், அண்டாக்களையும் தூக்கிக் கொண்டு போவோம். 'கோட்டை யடுப்பருகில் மணைபோட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணுவான். வேலை யெல்லாம் ஆன பிறகு, அடுப்பிலிருந்து இறக்கும் சமயத்தில் ஒரொரு யதார்த்தத்திலும் ஒரு கரண்டி எடுத்து மூக்கண்டை,