பக்கம்:புலவராற்றுப்படை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மதன் உடை முந்து நூல் - அழகினையுடைய முந்தின நூலாகிய அகத்தியத்தையும், -

மதன் - நூலினழகு. அகத்தியத்தின் முந்திய நூலொன்று தமிழ்க்கின்மையின் முந்து நூலென்ரும்.

அதன் வழி பட்ட தொல்காப்பியம் முதல் பல என பல்கா இலக்கணம் தெரிக்கும் விலக்கு இல் நூல் தேர்ந்து - அவ்வகத்தி யத்து வழிப்பட்ட தொல்காப்பிய முதலாகப் பல வென்னும்படி பல்கி இலக்கணத்தைத் தெரிவிக்கும் விலக்குதலில்லாத ஏனைய

நூல்களையுந் தேர்ந்து,

தொல்காப்பியம் வழிநூலாகலின், வழிப்பட்ட வென்ரும், பல்கா - பல்கி. தெரிவிக்கு மெனற்பாலது தெரிக்குமென நின்றது; மேலுரைத் தாங்குரைக்க. விலக்கு - முதனிலைத் தொழிற்பெயர். கற்றற்கமையாவிலக்குடை நூல்களை நீக்குதற்கு விலக்கினுலென் ரும். நூலென்னுமிரண்டன் கண்ணும் உம்மைகடொக்கன.

பொற்பு உறு எழுத்து சொல் பொருள் யாப்பு விழுமிய வகை இன் அணி இவை பழுநி - பொலிவுற்ற எழுத்துஞ் சொல் லும் பொருளும் யாப்பும் சிறப்பினவாகிய வகையினையுடைய அணியுமென்னும் இவ்விலக்கணங்கள் முற்றுப்பெற்று,

எஞ்சல் இல் சீர்த்தி பஞ்சகாவியம் பிற - குறைதலில்லாத மிகுபுகழினையுடைய பஞ்சகாவியங்களும் பிறவும், -

பஞ்சகாவியம் - சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. பிறவென்பது நீலகேசி, உதயணன்காதை, சூளாமணி முதலியவற்றையுந் தழுவ நின்றது. உம்மைக டொக்கன.

எட்டு தொகை ஒடு உம் பத்து பாட்டு ஒடு உம் இன்பு அமர் ஒன்பதிற் றிரட்டி கீழ்க்கணக்கு என சங்கம் மரீஇய பொங்குநூல் தேற்றி - எட்டுத் தொகையுடனும் பத்துப் பாட்டுடனும் இன்ப மமைந்த பதினெண்கீழ்க்கணக்குமென்று முன்னைய சங்கத்து அடிப் படவிருந்த பொலிகின்ற இலகிக்யநூல்களிற்றேறி,

எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புற நானுாறு என்பன. பத்துப்பாட்டு - முருகாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, சிறுபாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை,

20