பக்கம்:புலவராற்றுப்படை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரி உம் காரி உம் ஆய் உம் ஒரி உம் பேகன் உம் நள்ளி உம் அதிகன் உம் ஆகி - பாரி காரி ஆய் ஒரி பேகன் நள்ளி அதிகனெனவாய்,

உம்மைகள் எண்ணின்கண் வந்தன.

வரையாது கொடுத்தோர் வாழ் நாள் ஈது அன்று - தமக் கெனவொன்றும் வரைந்துவையாமற் கொடுத்தோராகிய வள்ளன் மார் வாழுங்கால மிஃதன்று,

அரையர் உம் தமிழர் அல்லர் - இக்காலத்தரசருந் தமிழை யுடையா ரல்லர்,

ஆகலின் - ஆதலால்,

நல் தமிழ் மாட்சியும் கற்றவர் மாட்சியும் புரிந்து - நல்ல தமிழின் மாட்சிமையையும் அதனைக்கற்ருரின் மாட்சிமையையும் விரும்பி,

உளம் களிப்ப தெரிந்து ஆங்கு அருள்நர் இல் என் கவற்சி இல் - உள்ளங்களிப்பத் தெரிந்து கொடுப்பாரில்லை யென்னுங் கவலையால், .

ஆங்கு - அசை. இல் உருபுமயக்கம்.

புல் என் முகன் கண்டு உடுக்கை உம் உண்டி உம் இருக்கை உம் உசாஅய் கொடுக்குநர் யார் என - புல்லென்ற முகத்தைக் கண்டு உடுக்கு மாடையு முண்ணுமுணவும் இருக்குமீடமுமுள்வா வென ஆராய்ந்து கொடுப்பார் யார் ஒருவருமிலரே யென்று,

'உசாவே சூழ்ச்சி' என்பது தொல்காப்பியம். சூழ்ச்சி - ஆராய்தல். யாரென்னும் வின எதிர்மறுத்து நின்றது.

அடுக்கும் அவர் கரப்ப குன்று வரும் நெஞ்சினன் உழந்து ஏ நின்றனன் - பாண்டுக்குமவர்கள் என்னைக் கண்டொளித்தலாற் குன்றுதல் வருகின்ற நெஞ்சினையுடையேளுய் வருந்தி நின்றேன்;

நெஞ்சினனென்னுங் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய் நின்றது. ஏ - அசை, .

கற்றவர் கல்லா மற்றவர் இவர் என தெற்று என படாஅ வகையிற்று ஆகி - கற்றவரிவர் கல்லாத மற்றவரிவரென்று தெளிவுபடாத வகையினை யுடையதாய்,

22