பக்கம்:புலவராற்றுப்படை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணை இருகோடு இன் இணை எருது பிணித்த பாண்டில் உம் - பருத்த இரு கொம்புகளையுடைய இரட்டை எருதுகளைக் கட்டின வண்டில்களும்,

சிவிகை உம் - பல்லக்குக்களும்,

சிறுகண் யானை உம் - சிறிய கண்களையுடைய யானைகளும்,

கூண்டு இனிது ஒழுகும் குறை இல் மறுகு தொறும் - கூடி இனிதா யொழுங்குபடச் செல்கின்ற குறைபாடில்லாத தெருக் கடோறும்,

கூடம் போன்ற கோபுரம் நிரை ஒடு மாடம் சான்ற மதுரைமா நகர் கண் - மலேச்சிகரத்தைப் போன்ற கோபுரங்களின் வரிசைகளோடே மாடங்களும் மிக்க மதுரை என்னும் பெரிய பட்டணத்தின்கண்,

மூதுாருங் குடியிருப்புமாகிய மதுரை யென்க.

பிந்திய சங்கம் முந்திய சங்கம் மூன்று ஒன்று ஆகி பிறந்தது ஆல் என - பிந்தினவிச்சங்கம் முந்தின சங்கங்கண் மூன்று மொன்ருய்ப் பிறந்ததென்னும்படி,

மூன்று மென்னு மும்மை தொக்கது. ஆல் - அசை.

தண் தமிழ் தெரிக்கும் பண்டைநூல் எழும்ப - தண்ணிய தமிழைத் தெரிவிக்கின்ற பழைய நூல்களெல்லாந் தலையெடுக்க வும், -

- - இயல் நனி விழைகுநர் குழிஇனர் பயில - இலக்கணத்தை

மிக விரும்புவோர் சென்று கூடியிருந்து கற்கவும்,

குழிஇன ரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

மால் செய் கல்வியர் மாண்பு இன் நூல் செய பெருமை

யைச் செய்யுங் கல்வியுடையார் மாட்சிமையினையுடைய பல நூல் களைச் செய்யவும்,

உரை காண் வல்லுநர் வரை காண்டு எழுத - நூல்கட் குரைகாணும் வல்லார் அவ்வந்நூலினளவைக் கண்டு உரை எழுத வும்,

25

25