பக்கம்:புலவராற்றுப்படை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை பிறழ்ந்து உற்ற குறை பல் காண்மார் முதுநூல் தேண்டி பழுது ஆய்ந்து அமைக்க - ஒழுங்கு மாறுபட்டுவந்த குற்றம் பலவற்றையுங் காண்பவர் பழைய நூல்களைத் தேடிப் பழுதாராய்ந்து திருத்தியமைக்கவும்,

குற்றம் போகிய கற்றன. கெடாஅ பேணுஉ வைகுமோர்

பரிக்கை காணுஉ -குற்றந்தீரக் கற்றனவற்றைப் பேணிவைத்திருப் போரைப் பரிக்கை கண்டு,

போகிய - வினையெச்சம்.

சிறப்பு பெயர் ஒடு பரிசில் உம் அளிப்ப - சிறப்புப் பெயரினே யும் பரிசினையுமவர்க்குக் கொடுக்கவும்,

பின் உம் வேண்டுவ என்ன உம் புரிய - மறுபடியும் வேண்டு வன எவற்றையுஞ் செய்யவும்,

இவ்வெச்சங்களில் உம்மைகடொக்கன.

மங்கல் இல் அரும் தமிழ் சங்கம் ஒன்று இரீஇனன் - மங்குத லில்லாத அரிய தமிழ்ச் சங்க மொன்றை யிருத்தினன்;

நிமிர் திரை முரியும் குமரி மருங்கு உற்ற சேது காவலர் திறல் குடி பிறந்தோன் - நிமிரா நிற்குந் திரைகள் முரிந்து விழு கின்ற கன்னியாகுமரிப் பக்கத்துள்ள சேதுவைக் காத்தற்ருெழி வில் வல்லாருடைய திறலான குடியிற் பிறந்தவனும்,

தீது தீர் வாழ்க்கை தென் புலம் காப்போன் - குற்றந் தீர்ந்த வாழ்க்கையினையுடைய தெற்கின் கண்ணதாகிய நிலத் தைக் காப்பவனும்,

தென்புலம் - தக்கணம்.

மறம் காண் பகைவர் வணங்கிய - மறத்தைக்கண்ட பகைவர் வணங்க,

வணங்கிய - வினயெச்சம்.

புறம் காண் மஞ்சு வரும் ஏறு இன் அஞ்சு வரு திறலினன் - அப்பகைவரின் முதுகைக் காண்கிற மேகத்தினின்று வருகிற இடி யையொத்த காண்பார்க் கச்சம் வருதற்குக் காரணமான திறலே

யுடையவனும்,

26

26