பக்கம்:புலவராற்றுப்படை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர்கள் தஞ் சொல்லையும் புகழையும் யாண்டும் பரத்தற்குக் கூடி இனிதாய் வீற்றிருக்கு மவைக்களத்தை நெருங்கி,

ஆண்டு யான் யாத்த கவி அரங்கு ஏற்றி - அங்கே யான் கட்டிக்கொண்டு சென்ற கவியை யரங்கேறச் செய்து,

வருமொழியகரமாகலின், குற்றுகரமிகரமாயிற்று.

உலகு சொல் சிறப்பு பெயர் ஒடு பெரு.அ வரிசை ஆன்ற பரிசில் உம் பெறுஉ - உலகம் புகழ்ந்து சொல்லுஞ் சிறப்புப் பெயருடனே வேருெருவரும் பெருத வரிசை சிறந்த பரிசில்களையும் பெற்று,

கண்டு அறிந்தவர் ஏ யாஅர் என வந்தனென் - முன்னமே யென்னக் கண்டறிந்துள்ளார் இப்போது கண்டு என் வேறு பாட்டால் இவன் யாரென்று மருளும்படி வந்தேன் ;

ஏ - அசை ; பிரிநிலையுமாம்.

நீயிர் உம் ஆண்டு செல்லியர் பல பெற மேயினிர் எனின் ஏ - நீவிரும் அங்கே சென்று சிறப்புப் பெயரும் பரிசிலுமென்னும் பலவற்றையும் பெறுதற்கு விரும்பினராயின்,

ஏ - அசை.

இன்னே இவண் விட்டு இப்போதே இவ்விடம் விடுத்து.

கால் இல் செல்லின் நாள் இல் செல்லும் - காலாலே நடந்து சென்ருல் நாளிற் பலகழியுமாதலால்,

காலில் - உருபுமயக்கம்.

உரும் உறுமு ஓடு உறழ் ஒலி இன் இருப்பு உருளை நான்கு இரு புறன் உம் உருள - இடியின் சத்தத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தையுடைய இரும்புருளைகளுன்கு இரண்டு பக்கத்து முருள வும்,

உறுமு - முதனிலைத் தொழிற்பெயர்.

கான் குழுமும் கொள்ளி வாஅய் பேஎய் உயிர்ப்பு இன் ஒலித்து உமிழும் கலி துமம் குழல் வாய் இல் சுழல் கொள்ள -

வனத்திற் கூடின கொள்ளிவாய்ப் பேயின் மூச்சையொப்பவொ

29