பக்கம்:புலவராற்றுப்படை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்து எந்திரங்கக்குகின்ற மிக்க புகை குழலின் வாயிற் சுழலு தலைக் கொள்ளவும், -

மரவட்டை செலவு ஒப்ப செல் பாண்டில் - மரவட்டை யினது நடையைப் போலச் செல்கின்ற வண்டில்கள்,

இஃது உருவுவமம்.

பல் கோத்த நெடும் தொடர் இன் - பலவற்றைக் கோத்த நெடிய தொடரினையுடைய,

நிரை நீண்டு கடும் கால் இன் கழி விசை இன் - நிரையாய் நீண்டு கடிய காற்றைப்போல வோடுகின்ற வேகத்தையுடைய,

எந்திர ஊர்தி இவர்ந்தனிர் படர்மின் - எந்திரவூர்தியிலே யேறிச்சென்மின் எந்திரவூர்தி - புகைவண்டில். இவர்ந்தனி ரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

அந்தம் இல் காட்சி அணி பல காண்பிர் - அங்ங்னஞ் சென்ருல் முடிவில்லாத காட்சியான அலங்காரங்கள் பலவற்றைக் காண்பீர் ;

வீறிய மாக்கள் ஏறு இறங்கு இடன்தொறும் அமிழ்து இன் ஊறிய உண்டி பல் பெறுகுவிர் - பெருமையுற்ற மனிதர்கள் ஏறுதலிறங்குதலையுடைய இடங்கடோறும் அமிழ்தையொப்பச் சுவையேறின உண்டிகள் பலவற்றையும் பெறுவீர் :

ஏறு இறங்கு - முதனிலைத் தொழிற்பெயர்கள்.

மன்னது பல் நாள் நடந்தனிர் எய்க்கும் கால் உழப்பு அறியா மால் உறு செலவு இன் - தரிபட்டிராமற் பலநாட்களாக நடந் திளேக்குங் கால் வருத்தத்தை யறியாமற் பெருமை பொருந்தின

போக்கினையுடையதாக,

மலைப்பு உறு நெடு வழி ஒரு நாள் தொலைச்சி - மலைப்புத் தங்கின நீண்ட வழியை ஒரே நாளிற் போக்கி,

சூடிய நறுமலர் வாடு இயல் உரு முன் - நீவிர் சூடின நறியபூ வாடு மியற்கையைப் பொருந்தா முன்னமே,

நிதி மலி கூடல் அம் பதி வயின் புகுவிர் - நிதிமலிகின்ற கூடலென்னுமழகிய மதுரைப்பதியினிடத்துப் புகுவீர் :

30