பக்கம்:புலவராற்றுப்படை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவவு மதி வட்டம் தவவு இல் குடை நிழற்ற - உவாமதி போல வட்டமாகிய கெடுதவில்லாத குடை நிழலைச்செய்ய,

வரும் இறை இவன் என - உலா வருகின்ற அரசனிவ. னென்று,

பொருவு அறு விதி இல் நரம்பு வகை பிழையா பரப்பிய நான்கு வகை யாழ் இன் பாணர் ஏழ் இல் பாட ஒப்பில்லையான விதியானே நரம்புவகை பிழைபடாமற் பரத்திக்கட்டின நான்கு வகையான யாழினையுடைய பாணர் ஏழிசையிற்பாடவும்,

நரம்புவகை - இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதி றுைம், ஏழும், நான்குவகையாழ் - பேரி, மகரம், சகோடம், செங்கோடு. எழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமென்பன, ஏழென்னும் வரையறைப் பண்புப்பெயர்

அப்பண்பினையுடைய இசைக்காயிற்று.

இரண்டு பத்து அடுக்கி ஒன்று கடை வைத்த வண்மையர் ஒரு வடிவு எடுத்து அண்மினர் என - இரண்டுபத்தைச் சேர வைத்து ஒன்றை அதன் கடையினிறுத்தின எண்ணையுடைய வள் ளன்மையானவரும் ஒரேவடிவெடுத்து வந்தாரென்று.

என்றது இருபத்தொரு வள்ளல்களை.

வான் கவி வாணர் நான்கு இல் பாட - சிறந்த கவிவாணர் கள் நான்கு கவியாற்பாடவும்,

நான்குகவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். இல் - உருபு மயக்கம். நான்கென்னும் வரையறைப் பண்புப்பெயரும்

அவ்வாறே கவிக்காயிற்று.

பொன் முடி கவித்து - பொன்னலான முடியைச் சிரசி லணிந்து,

வென் வேல் ஏந்தி - வெற்றியையுடைய வேற்படையைக் கையிலேந்தி, -

பாண்டி நாடு அளிக்கும் பண்பு இன் ஆண் தகை - பாண்டி நாட்டினைக் காக்கின்ற பண்பினையுடைய ஆண்டகை,

இரவலர்க்கு அடையா வாயில் புரவலன் - இரத்தற்ருெழில் வல்ல அடைக்கப்படாத தலைவாசலையுடைய புரத்தற்ருெழிலில்

32