பக்கம்:புலவராற்றுப்படை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோது பதி ஒடுக்கும் பாற்கர சேதுபதி - குற்றமுள்ள அரசர் களை யொடுக்குகின்ற பாஸ்கர சேதுபதி என்னுமரசன்,

ஆண்டகையும் புரவலனுமாகிய சேதுபதி யென்க.

அருள் ஒடு நிலைஇயர் பொருள் நனி உதவ - தன்னருளோடே நிலைபெறுவதாகப் பொருளை மிகவுமுதவுதலால்,

அன்னவன் பெயர் ஒடு மன்னு பெயர் கொண்டு - அவ் வரசன் பெயரோடே தரிபட்ட பெயரைக்கொண்டு,

அன்னவன் பெயரென்றது அவ்வரசனின் குலப்பெயரை, அது, சேதுபதி யென்பதாம். எனவே, சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’ என்னும் பெயரைக்கொண்டென்றபடி.

சங்கம் மேவும் ஒர் அங்கம் ஆகி - அச்சங்கத்தைப் பொருந் தின ஒரவயவமாய், -

ஊண் உடை ஏனைய மாணவர்க்கு ஆர்த்தி - ஊணையு முடையையும் மற்றவைகளையும் மாளுக்கர்களுக்குக் கொடுத்து,

ஏனைய - இருக்கை, முழுக்கெண்ணெய் போல்வன.

நல் ஆசிரியர் பல்லோர் வைகினர் - நல்லாசிரியர் பலரிருந்து,

நல்லாசிரியர் - 'குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை, நிலமலை நிறைகோன் மலர் நிகர் மாட்சியு, முலகிய லறிவோ டுயர்குண மினையவு, மமைபவ னுாலுரை யாசிரி யன்னே' என்னுமியல்பினையுடையார். வைகின ரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

தொல் நூல் ஒரு சிறை பின் நூல் ஒரு சிறை - பழைய நூல்களொரு பக்கமும் பிந்தின நூல்களொருபக்கமுமாக,

ஒவு இறந்து உணர்த்தும் தா இல் கொள்கை - ஒழிவின்றிக் கற்பிக்கின்ற வருத்தமில்லாத கொள்கையினையுடைய,

அழகு அமர் காட்சி கழகம் உம் காண்பிர் - அழகு தங்கின காட்சியினையுடைய கழகத்தையுங் காண்பீர் ;

இலக்கியத்தன உம் இலக்கணத்தன உம் அலக்கண் தீர்க்கும் ஆகமத்தன உம் என - இல்க்கியத்தையுடையனவும் இலக்கணத்

33