பக்கம்:புலவராற்றுப்படை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தையுடையனவும் துன்பத்தைத் தீர்க்கின்ற ஆகமங்களை யுடை யனவுமென்று, - -

முதிய உம் ஆன்ற முறைமை இன் அமைந்த புதிய உம் ஆகி பொலிந்து - முதியவைகளும் சிறந்த முறைமையோடேயமைந்த புதியவைகளுமாய்ப் பொலிவுற்று, -

நசைஇ, உற்று - விரும்பிப்போய்,

ஒரும் மாக்கள் உள்ளம் தேரும் - ஒர்ந்துணரும் மனிதர் களின் மனங்கள் தேர்தற்குக் காரணமான,

உள்ளந் தேரு மென்பது காரணங் குறித்துநின்றது: நோய் தீருமருநது என்ருற்போல. பொலிந்து தேருஞ்சாலை யென்க.

பாண்டியன் சுவடி சாலை உம் காண்பிர் - பாண்டியன் பெயரானே நிறுவிய புத்தகசாலையையுங் காண்பீர்;

அது 'பாண்டியன் புத்தகசாலை’ யாம்.

புத்தகசாலை யெனனது சுவடிச்சாலை யென்றது, ஏட்டுப் பிரதிகளே யுந் தழுவுதற்கென்க. -

தென்மொழி எழுத்து ஒடு வடமொழி எழுத்து உம் ஈங்கு நனி பாய ஆங்கில அக்கரம் உம் - தமிழெழுத்துக்களுடன் சம்ஸ் கிருத வெழுத்துக்களையும் இங்கே மிகப் பரவிய ஆங்கில வெழுத் துக்களையும்,

தென்மொழி பலவற்றுள்ளுஞ் சிறப்புடைத்துத் தமிழேயாக லின் அதனைத் தென்மொழியென்றும், வடமொழிகளுள் சம்ஸ் கிருதமற்றேயாகலின் அதனை வடமொழி யென்று முரைத்தாம். ஆங்கிலாக்கரம் - வடசொன் முடிபு.

கால் கொள வாக்குபு - காலைத் தமக்காதாரமாகக் கொள் ளும்படி வார்த்து,

காலென்றது அச்செழுத்தின் கீழ்க்கட்டையை.

பால்வேறு படுத்தி - பகுதி வேருகச்செய்து, ஒன்று பல ஆகி சென்று உற பதிக்கும் அச்சு சாலை உம் மெச்ச காண்பிர் - ஒரு பிரதி பல பிரதிகளா யெங்குஞ் சென்று

பொருந்தப் பதிப்பிக்கும் அச்சுக்கூடத்தையும் நீவிரே மெச்சிக் கொள்ளும்படி காண்பீர்; هه.. ' ' : , , , ' ' '" r

34