பக்கம்:புலவராற்றுப்படை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன் கலாசாலைபோலப் புத்தகசாலையும் அச்சுச்சாலையும் சங் கத்தினங்கமெனக்கொள்க.

கண்டனிர் - இவற்றைக்கண்டு.

கண்டனிரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

சங்கம் மண்டபம் புகின் ஏ - சங்கத்து மண்டபத்தின்கட்

புகுவீராயின்,

ஏ-அசை.

தி தமிழ் புணரி மாந்திய மக்கள் உம் - இனிய தமிழ்க் கடலைக் குடித்த மனிதர்களும், -

என்றது தமிழ்ப்புலவர்கள்.

வடமொழி தேர்ந்து திடம் உறுபவர் உம் - சமஸ்கிருதத்திற் றேர்ந்து திடங்கொண்டவர்களும்,

என்றது சமஸ்கிருத பண்டிதர்களை.

ஆங்கிலம் பயின்ற பாங்கர் உம் ஆகி - ஆங்கிலபாடையைக் கற்ற பாவனையுடையவருமாய், -

என்றது. பீ. ஏ., எம். ஏ. க்களே.

புரை அறு நூல்கட்கு உரை செய்குநர் உம் - குற்றமற்ற நூல்களுக்கு உரை செய்வாரும்,

நால் வகை பயக்கும் நூல் செய்குநர் உம் - நான்குவகைப் பயனையும் பயக்கின்ற நூல்களைச் செய்வாரும்,

நால்வகைப் பயன் - அறம், பொருள், இன்பம், வீடு.

முது நூல் ஒரா ஆராய்குநர் உம் என - முதிய நூல்களே யோர்ந்து பழுதாராய் வாருமென்று,

பெரும்புலவர் மருங்கு அமர - பேரறிவினையுடையார் இரு மருங்கு மமர்தலால்,

3.

5