பக்கம்:புலவராற்றுப்படை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மண்டு உடு இல் வெண் திங்கள் உம் - நெருங்கின. விண்மீன் கண்டுவில் வெள்ளிய திங்களும்,

தரம் காட்டி அரங்கு ஏறிய - தந்தந் தரத்தைக் காட்டி அரங்கத்தின் கண்ணேறவும்,

பயில் சிறப்பு பெயர் எய்திய - பயில்கின்ற சிறப்புப் பெயரைப் பெறவும்,

அற பரிசில் உற கொள்ளிய - தருமமான பரிசிலைப் பொருந் தும்படி பெற்றுக் கொள்ளவும்,

நிலை பயிலும் கலை பயிலிய - நிலைமையுடன் பயில்கிற பலகலைகளைக் கற்கவும்,

இவை நான்கும் உம்மை தொக்க வினையெச்சங்கள்.

தவ மலியும் அவர் நடுவண் - மிக மலிந்திருக்குமவர் கண்டுவில் -

பெரும் கடல் இல் செஞ்ஞாயிறு உம் பொர - கரிய கடலின் கட் செவந்த ஞாயிறும் போல, -

விரை பாண்டித்துரைத்தேவன் தவிசில் தலைமை கொள - வாசனையுள்ள பாண்டித்துரைத்தேவன் ஆசனத்தில் தலைமைத் தன்மையைக் கொள்ளும்படி,

ஆற்றல் சால் சிறப்பு இன் ஆங்க வீற்று இருக்கும் காட்சி கண்டனிர் - வலிமைமிக்க சிறப்போடே வீற்றிருக்குங் காட்சியை நீவிர் கண்டு, -

ஆங்க - அசை, கண்டனிரென்னும் வினைமுற்று வினையெச்ச மாய் நின்றது.

களித்தனிர் அண்மின் - களிப்புற்று நெருங்கினால்,

களித்தனிரென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

மாட்சி இன் அவன் ஏ - மாட்சிமையையுடைய அந்தப் பாண்டித்துரைத் தேவன்,

ஏ - அசை.

36