பக்கம்:புலவராற்றுப்படை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொலம் தகடு குழித்து - பொன்னலான தகட்டைக் குழியச் செய்து, .

பொற்பு உற அமைத்த - அதிலே பொலிவுறவமைக்கப்பட்ட

வலந்த பொன் தொடர் இன் மாண்பிற்று ஆகி பழுது அற சமைந்த-கட்டின பொற்சங்கிலியையுடைய மாட்சிமையையுடைய

தாய்ப் பழுதில்லையாம்படி சமைந்த,

பொழுது அறி கருவி உம் - வேளையை யறிதற்குக் காரண மான கருவியையும்,

என்றது கடிகாரத்தை.

நொய் மயிர் துய் என ஆய்ந்து நெய்த - நுண்ணிய மயிரைப் பஞ்சு போல வாய்ந்து அதனுனெய்யப்பட்ட,

மின் இவர்ந்து அன்ன பொன் இழை நுழைத்த - மின்னுக் கொடி படர்ந்தாற்போலப் பொன்னலாகிய நூலே யூடே நுழைத்த

மாசு கெட சிறந்த காசுமீரம் உம் - குற்றமறச் சிறந்த காசுமீரமாகிய போர்வையையும்,

காசுமீரம் - ஆகுபெயர் ; இது, பிறந்தவழிக் கூறல்.

அரையன் விழு தலை கழுத்து அளவு அமைந்த பணயம் பல உம்-நம்மரசனது சிறந்த தலையுரு கழுத்துவரையமைந்த பணம் பலவற்றையும், -

இன. அற தரீஇ - இனையில்லையாம்படி தந்து,

- பெருகிய மகிழ்வு இல் பேணுபு விடுக்கும் - பெருகிய மகிழ்ச்சியோடே தும்மைப் பேணி அநுப்புவன் :

இல் - உருபுமயக்கம்.

வளம் மவி தன்ம்ை இல் - இச்செல்வம் நுமக்கு மிக்க தன்மையாய்.

இல் - உருபு மயக்கம்.