பக்கம்:புலவராற்றுப்படை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

செம் பொன் பழுநிய செழும் மரன் - செவந்த பொன்னானே முற்றுப் பெற்ற செழுமையான வொரு மரம்,

வம்பு ஒடு உம் பொலிந்து வந்தது ஆல் என ஏ வருகுவீர் மாது ஓ - வாசனையோடு பொலிவு பெற்று வந்ததுபோல வருகு வீர் என்றவாறு.

உம், ஆல், ஏ, மாது, ஓ - அசைகள். இப்பாட்டின்கண் எச்சங்களும் முற்றுக்களும் ஆண்டாண்டுத் தெள்ளிதிற் கிடந்து வினைமுடித்தலின், யாமீன்டவற்றைத் திரட்டிக் காட்டிலம். 'அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு, மியன்று பொ ருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டி யல் வழக்கின்" என்பவாகலின், மாட்டுறுப்புச்சிலவாண்டான் டுள. இதன்கண் ஒருமை பன்மைமயக்கம் ஆற்றுப்படை மருங்கிற் போற்றியது. இதனுட் சில வஞ்சியடிகளும் வந்தன. ’இயற்சீர் வெள்ளடி- என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உம்மையாற் பிற வடியையுந் தழீஇ 'பாஅல்புளி ப்பினும் பகலிருளினும்' என்னும் வஞ்சியடியை யெடுத்தோதினர். இயற்சீர் வெள்ளடி வஞ்சி யடியிவை, யகப்பட வரூஉ மகவலு முளவே என்பது யாப்பருங் கலம், அல்லது உம், ஆசிரியத்து விகற்பமே வஞ்சியாகலானுமது வஞ்சியா மென்க. பொருநராற்றுப்படைக்கண் வஞ்சியடிகண் மிக்குவந்தமை யாகலின் ஆசிரிய நடைத்தே வஞ்சி' என் பதனாற் பின்னர் வஞ்சி மிகவும் வந்தன வென்றுணர்க வென்பர் நச்சினார்க்கினியர்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல், கற்றறிந்த மாந் தர் கடன் ஆகலின், யாமிறைப்பயிற்சியானே செய்தவிப் பாட்டினிடத்தும், விரிவஞ்சி ஒருவாறு சுருக்கி முடித்த இவ்வுரை யினிடத்துங் காணப்படுங் குற்றங்களைக் களைந்து கோடல் கற் றோர்க்குக் கடனேயாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப்

புலவராற்றுப்படை மூலமும் உரையும்

மு ற் றி ன