பக்கம்:புலவராற்றுப்படை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோற்றுவாய்

அளவற்ற அருளாளன். அலகிலா அன்புடையோன். அகி லம் அனைத்துக்கும் அதிபதி. அடக்கி ஆள்பவன். அந்தரங்கங்களை அறிபவன். அன்னம் அளிப்பவன். அனுதாபமுடையவன். அதி காரி, அனந்திரன். அரசாங்கமுடையவன். அனைத்தும் அறிந்த வன். அரிதினும் அரியவை அமைப்பவன். அண்மியோரின் அல்லல் அறுப்பவன். அகதிகள் அநாதைகள் அனைவருக்கும் அளி செய்ப வன். அச்சம் அகற்றுபவன். அறிவூட்டுபவன். அல்லாஹாத் திஆலா.

ஆற்றல் மிக்கவன். ஆண்டவன். ஆலம் அடங்கலுக்கும் நாயகன். ஆதியானவன். -

இராஜன். இம்மை மறுமை இரண்டிலும் இதமான இக பர இன்பங்களே இவனியில் இருக்கும் இனியவருக்கு இலகுவாக் கும் பொருட்டு இறுதித்துாதர் (இ) றசூலுல்லாஹ் மூலம் இறைத் தவன். இறைவன். இஸ்லாத்தை இயற்றியவன். இணை துணை யற்றவன். இறுமாப்புக் கொண்டவனே இழிவுபடுத்துபவன். இபாதத்துடைய இட்டமுடையோரை-- இரந்தேத்துவோரை இரட்சிப்பவன்.

ஈமான் கொள்ளப்படவேண்டிய ஈடிணையற்றவன். ஈடு பாடுடையோருக்கு ஈருலகிலும் ஈபவன். ஈகையில்ை ஈடேற்றும் ஈட்டச் செய்பவன். ஈனவரான ஈனரையும் ஈர்க்கும் ஈர்ப்புடை யோன்.

உருவமைப்பவன். உயர்த்துபவன். உகப்பவன். உயர்ந் தவன். உண்மையானவன். உயிர்ப்பிப்பவன். புதிதாய் உண் டாக்குபவன். உயர்ச்சி பெற்றவன். உஞற்றுவோருக்கு உதவு பவன். உலகம் உய்ய உம்மி நபியை உதாரண புருஷராய் உதிக்க உதவியவன். உலகோருக்கு உபகாரியாக உள்ளவன். உயிரை உரியமுறையில் உருவாக்குபவன். உலகருக்கு உணவளிப் பவன். உவப்புடையோரை உவப்பவன். உலக உவகையால் உள் ளழிந்து உழலுபவனே உறுத்துபவன். -

ஊக்கம் ஊட்டி ஊக்குபவன். ஊழி முதல்வன். ஊணழிப் பவன். ஊனவனின் ஊனக்கண்ணுக்கு அப்பாற்பட்டவன்.

எக்கசக்கம் எதுவுமில்லாமல் எகீன் (நம்பிக்கை) வைத்தற் குரியவன். எழுப்புபவன். எங்கும் தரிபாடானவன். எம்மை எச்சரிக்கும் எசமான் எஞ்ஞான்றும் எம்மான் என்று எடுத்