பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

置登 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

அப்போது இராமநாதபுரம் சம்ஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், "என்னுடைய சமஸ் தானத்தில் ஒரே ஒரு கோடி... அதுதான் தனுஷ் கோடி (இராமநாதபுரம் கடவுள்) என்று கூறினார் (கோடி - நூறு இலட்சம்; முனை: கடைசி)

3

அரசும் வேம்பும்

இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி யார் ஒரு சமயம் புலவர்களை வரவழைத்து மாநாடு நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

வேம்புப் புலவர் என்பவர், அந்த மாநாட்டுக்குத் தாமதமாக வர நேரிட்டது. 3.

அவரைப் பார்த்ததும், வேம்புக்கு அவையில் இடமில்லை' என்றார் மன்னர்,

வேம்புப் புலவரும் சளைக்காமல், அரசுக்கு அருகில் வேம்புக்கு இடம் உண்டு’ என்று கூறிக் கொண்டு, மன்னரின் கால்களுக்கு இடையே தரை யில் அமர்ந்தார். 'i

மன்னர் அவருடைய நாவன்மையைப் பாராட்டி, அவையில் அவருக்கு இடம் அளித்தார்.

அரசு’ என்பது அரசரையும், அரச மரத்தை யும் குறிக்கும் வேம்பு என்பது வேம்புப் புலவரை யும் வேப்பமரத்தையும் குறிக்கும். -