பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

முல்லை பிஎல். முத்தையா i 1

4. இரண களம் எது? இரண்டு புலவர்கள் சந்தித்தனர். அப்போது ஒரு புலவர் மெதுவாக, இடர்பட்டுப் பேசினார்.

அதை அறிந்த மற்ற புலவர், "தாங்கள் சரியாகப் பேச இயலாமல் திணறுகிறீர்களே ஏன்?’’ என்று கேட்டார்.

'இரணகளமாக இருப்பதால், நன்கு பேச முடியாமல் துன்புறுகிறேன்’ என்று பதில் அளித் தார் அந்தப் புலவர்.

'இரணகளமாக இருக்கிறது என்கிறீர்களே: போர்க்களத்திற்குப் போய் வந்தீர்களா?’ என்று கேட்டார் முதல் புலவர்.

"என் தொண்டை சில நாட்களாக, புண்ணாகி

R - 印 a 3 Ag جنگے . حِ عمر

இருக்கிறது. அதையே இரணகளம் என்று குறிப்பிட்டேன்' என்றார் மற்றைய புலவர்.

S உண்ட இடம் எது?

புலவர் ஒருவர், தம் நண்பரான மற்றொரு புலவரைக் காண வந்திருந்தார். இருவரும் உணவு உண்டு, வெற்றிலைபாக்கு போட்டுக் கொண்டு அளவளாவினர்.

அப்போது வீட்டுப் புல்வர் தம் மனைவியைக் கூப்பிட்டு, 'ஐயா உண்ட இடத்தில் சாணியைத் தடவு' என்றார்.