பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

முல்லை பிஎல். முத்தையா 13

அங்கே வந்த மற்றொரு புலவர், மூன்றரை ஆண்டுகள் துன்புற்று, தொல்லைகளை அனுபவித்த பின் அவை அவ்வளவாகத் தெரியாமல், எளிதாகி விடும் அல்லவா? அதைத்தான் சோதிடர் கூறுகி றார்' என்றார்.

புலி வந்தால் என்ன?

வெண்பாப் புலிக் கவிராயர் என்னும் பெயர் கொண்ட ஒரு புலவர் இருந்தார். (வெண்பா இயற்றுவதில் அவர் புலி போன்றவர்.)

ஒருசமயம், சிவகெங்கை மன்னரைக் காண, வெண்பாப் புலிக் கவிராயர் சென்றார், கவிராயர் மாளிகையினுள் நுழையும்போது,புலி வருகிறது!’ என்று மன்னரின் எதிரில் கூறினார்.

மன்னர் அதைக் கேட்டுச் சிறிதும் சளைக்காமல் இங்கே வேல் உள்ளது!’ என்றார்.

மன்னர் வேல் இருக்கிறது” என்று கூறியதன் பொருள், தன்னுடைய அரண்மனை வித்துவானாக இங்கே வேல்சாமிக் கவிராயர் இருக்கிறார் என்ப தைக் குறிப்பிட்டதாகும். மற்றும், புலியைத் தாக்குவதற்கு வேல் (ஈட்டி) உள்ளது என்றும் பொருளாகும்.