பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் ஓரமா? ஈடு வழியா? பெரிய சாலையின் மத்தியில், பலர் பேசிக் கொாடே சென்றனர். அவர்களில் இரண்டு புலவர் களும் சென்று கொண்டிருந்தனர். ஓரமாகப் போவது நல்லது; நடுவழியில் செல்வது ஆபத் தானது; ஓரமாகப் போகுமாறு, காவலர்கள் எச்சரிக் கிறார்கள், அவர்கள் பேச்சை மீறினால், தண்ட னைக்கு ஆளாக நேரிடும் என்றார் புலவர் ஒருவர், "நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஓரம் போகக்கூடாது; எப்பொழுதும் நடுவழியில் தான் செல்ல வேண்டும். அதுவே நீதி முறை என்றார் மற்றொரு புலவர். ' நீங்கள் கூறுவது, நீதி முறைக்குப் பொருந் தும்; சாலை விதிமுறைகளுக்குப் பொருந்தாது என்றார் புலவர். {+'ஓரம் -விளிம்பு, ஒருதலைச் சார்பானது என்று பொருள்) --- கூடிப் படித்தவரா? கூடப் படித்தவரா? சைவ மடத்தின் தலைவரும் ஒரு புலவரும் அளவனாவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வேறு சிலரும் வந்திருந்தனர் . அவர்களிடம், இந்தப் புலவர் கல்வி அறிவில் திறமையாளர்; இவர் நம்முடன் கூடப் படித்தவர்' என்று கூறினார் மடத்தின் தலைவர்,