பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

முல்லை பிஎல், முத்தையா 17

霍空 காதிரை சிரிக்கச்சொன்னார்

தமிழ்ப் புலவர் வகுப்பிலே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அபுதுல் காதிர் என்னும் முஸ்லிம் மாணவன் ஒருவனும் அந்த வகுப்பிலே இருந்தான். அவனை காதிர் என்றே சுருக்கமாக அழைப் பாாகள.

புலவர் காதிரைப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார். அவன் தவறாக விடை அளித்தான். மாணவர்கள் எல்லோரும் சிரித்தனர் காதிர் மட்டும் சிரிக்காமல் இருந்தான். அதைக் கண்ட புலவர், ‘'சிரிக்காதிர் சிரிக்காதிர்’ என்றார்.

அதைக் கேட்ட மற்ற மாணவர்கள் ஒருவரும் சிரிக்கவில்லை. புலவர் மேலும், சிரிக்க எதிர் சிரிக் காதிர்’ என்று கூறினார். அப்போது மாணவர்கள், நாம் சிரிக்காமல் இருக்கும்போதே , ஆசிரியர் இப்படிக் கூறுகிறாரே, யாரேனும் வாய்க்குள் சிரிக் கின்றனரோ என்ற எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தனர்.

மாணவர்களின் தடுமாற்றத்தை அறிந்த புலவர், 'காதிர் மட்டும் சிரிக்காமல் இருந்தான், அதனால், அவனையும் சிரிக்கும்படி, சிரிக்காதிர்' சிரி+காதிர் என்று கூறினேன். வேறு ஒன்று மில்லை' என்றார்.

(சிரி-காதிர் என்றால், சிரி காதிர் என்று பொருள் சிரிக்காதிர் என்றால், சிரிக்காதீர்' என்றாகும்.)