பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


3 பக்தர்களை தாங்கும் தகைமை

திருவாடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவான தேசிகரும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்கள். ஆனால், சந்தித்ததில்லை. - முதல் முறையாக, அம்பலவான தேசிகரைக் காணச்சென்ற பண்டிதமணி, முறைப்படி விழுந்து

வணங்கினார்.

அப்பொழுது, பண்டிதமணியின் ஊன்றுகோல் வழுவியது. அதைப் பார்த்த தேசிகர், உடனே எழுந்து வந்து அவரைத் தாங்கிப் பிடித்தார்.

உள்ளம் நெகிழ்ந்த பண்டிதமணி, "பக்தர் களாகிய நாங்கள் தவறுவதும், தாங்கள் தாங்குவ தும் இயல்புதானே' என்றார்.

"இனிமேல் சந்திக்கும் பொழுது விழுந்து வணங்க வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார்

தேசிகர்.

† 4,

பெரும் செல்வம்

செல்வர் ஒருவர் ஒரு புலவரிடம் தமிழ்க் கல்வி கற்றுக்கொள்ள விரும்பினார். புலவர் தினமும் செல்வர் வீட்டுக்குச் சென்று, தமிழ்க் கல்வியில் பயிற்சி அளித்தார்.