பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

逻名 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

வைணவ சபை ஒன்றில் சொற்பொழிவு நிகழ்த்த அவரை அழைத்தனர். .

புலவர் சபைக்குச் சென்று, சிறப்பான சொற். பொழிவு நிகழ்த்தினார். புலவர் சைவ சமயத்தினரா யினும் வைணவத்தில் மிகுந்த புலமை பெற்றிருப் பதைக் கண்டு வைணவர்கள் அவரைப் பெரிதும் பாராட்டிப் புகழ்ந்தனர்.

அதை அறிந்த சபைத் தலைவர், மிகக் களிப் புற்று, ஒரு பெரிய மலர் மாலையை வரவழைத்து, சொற்பொழிவாளரான புலவரைப் பாராட்டி, மலர் மாலையை அணிவித்தார். .

அந்த மாலை மிக நீண்டதாய், புலவரின் வயிற்றுக்கும் கீழே தொங்கியது. அந்த மாலையால் மிக மகிழ்ச்சியடைந்த புலவர். நன்றி கூற எழுந்தார். -

இன்று நான் வைணவ சமயச் சார்பாக, சொற்பொழிவு நிகழ்த்தியதனால், அடைதற்கு அரிய நெடுமாலை அடைந்தேன்' என்று

கூறினார்,

நெடுமாலை, நீண்ட மாலை, நீண்டு வளர்ந்த திருமாலை என்றும் பொருள். .