பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லை பிஎல். முத்தையா

23


19

பெண்மணிகளின் ஒலி


பண்டிதமணி கதிரேசன் செட்டியார், நேமத்தான் பட்டி பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தார்.

அவர் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, பெண்களின் பகுதியில் பலர் பேசிக்கொண்டிருந்தனர். அது இடையூறாக இருந்தது.

அதைக் கவனித்த பண்டிதமணி, “பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்” என்றார்.

உடனே பேச்சு நின்று அமைதி நிலவிற்று.


20

அவர்கள் கற்புடையார்

குறு நில மன்னர் ஒருவரிடமிருந்து ஒரு புலவருக்கு, இரண்டு மூடைகள் அரிசி , தன்கொடை கிடைத்தன. அதைப் புடைத்து, கற்களை நீக்கி, சுத்தமாக வைத்துக் கொள்ள எண்ணினார்.

புலவர் தம் மாணவனிடம் “அரிசி மூடை களைப் புடைப்பதற்கு இரண்டு பெண்களை அழைத்து வா. களவாணிகளை அழைத்து வராதே, அவர்கள் அரிசியைக் களவாடி, துணியில் முடிந்து கொண்டு போய்விடுவர் என்றார்.