பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

முல்லை பிஎல். முத்தையா 29

  • , , , 25 மேலைச் சிவபுரிக்குச் செல்லவில்லை

இரண்டு புலவர்கள், மேலைச்சிவபுரி என்ற ஊருக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு பக்கங்களிலிருந்தும் இரண்டு கார்கள், மிக விரைவாக வந்தன. -

இரண்டு கார்களுக்கும் மத்தியில், அவர்கள் இருவரும் கதிகலங்கி அப்படியே அகப்பட்டுக் கொண்டனர்.

சிறிது காயத்துடன் இருவரும் உயிர் தப்பினர்.

அவர்களில் ஒருவர்.மற்றவரிடம் (வானத்தைச் சுட்டிக்காட்டி) - w

"நாம் இதுவரையில், மேலைச்சிவபுரிக்கே (மேலே உள்ள சிவலோகத்துக்கே) போய்ச் சேர்ந் திருப் போம். இறைவன் திருவருளால், உயிர் பிழைத்தோம் என்றார். காயம் ஏற்பட்டபோதிலும், புலவர்கள் நகைச்சுவையை மறக்கவில்லை.

26 சீனிவாசனின் துயில் பண்டிதமணி ஒரு ஊருக்குச் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றிருந்தார். சொற்பொழிவு முடிந்த

தும், விருந்து அளித்து உபசரித்தனர் இரவு வேளை யானதால், பால் கொண்டுவந்து பண்டிதமணிக்குக்

கொடுத்தார் ஒருவர்.