பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

முல்லை பிஎல் முத்தையா 35

33 பிள்ளைக்குத் தொட்டில் சொந்தம்

செட்டி நாட்டு வட்டாரத்தில், ஒரு ஊருக்குக் கோடை காலத்தில், அப்பாவு பிள்ளை என்ற புலவர் முன்பே தமக்கு அறிமுகமான செட்டியார் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். - ;”

அங்கே கிணற்றின் அருகில் இருந்த தொட்டி யில், செட்டியார் குளிப்பதற்காக தண்ணீர் நிரப்பப் பட்டிருந்தது. எங்கே குளிப்பது என எண்ணிக் கொண்டிருந்த அப்பாவு பிள்ளை, தொட்டியில் இருந்த தண்ணிரைக் கண்டதும், மிக மகிழ்ச்சியோடு அதில் இறங்கி உட்கார்ந்து விட்டார். . .

வீட்டுக்காரச் செட்டியார் வந்து பார்த்தார்: புலவரைப் பார்த்து, 'எனக்காக வைத்திருந்த தொட்டியில் நீர் இறங்கிக் குளிக்கலாமா?’ என்று மிடுக்கோடு கேட்டார்.

உடனே அப்பாவு பிள்ளை, தொட்டிக்கும் பிள்ளைக்கும்தான் சொந்தம்.செட்டிக்கும் தொட்டிக் கும் என்ன சம்பந்தம்?' என தாமும் மிடுக்காகவே பதில் அளித்தார் .

தொட்டிலுக்கும் பிள்ளைக்கும் தானே தொடர்பு என்பது இயல்புதானே.