பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

李溪、 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

உடனே வேலையாள் மூலம் பலகை அனுப் பினார் செல்வந்தர்,

(பலகை என்பது, உட்கார்ந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கான பலகை. அதாவது ஆசனப்பலகை"யாகும்.) - -

43

இருவரும் ஒரே கிலையா?

ஒருநாள் மாலை வேளையில், புலவரும் அவருடைய நண்பரும் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். -

அப்போது இருவர் எதிரே வந்து கொண்டிருந் தனர். அவர்களுடைய தோற்றம் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்ட புலவர், அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்களா?’ என்று கேட்டார்.

ஆம், இருவரும் உடன் பிறந்தவர்கள். இரு வரும் ஒத்த கல்வியறிவு உடையவர்கள். ஆனால், மூத்தவன் பணமுடையவன். இளையவன் பணமற்ற வறியவனாக இருக்கிறான். இதுவே, அவர்களுக் குள் ஏற்றத் தாழ்வு’ என்று கூறினார் நண்பர்.

"அப்படியானால், பணத்தில் இருவரும் ஒரே நிலைமை உடையவர்கள் என்று சொல்லுங்கள்’’ என்றார் புலவர்.

இல்லை, மூத்தவன் பணமுடையவன், இளையவன் ஏழை என்கிறேன்’ என்றார் நண்பர்.