பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவர் மகிழ்ச்சியோடு, சிவனுக்கும் லிங்கத் துக்கும் மத்தியில் இராமன் அகப்பட்டுக் கொண் டான்' என்று கூறி அமைதியானார்.

傘5 புலவருக்கு இசைவாணர் அளித்த பதில்

இசைவாணர் ஒருவர், தம் நண்பரான

புலவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இசைவாணரிடம் தங்களுடைய பாட்டு அருமையாக இருப்பதாகப் பலர் கூறுகின்ற னர். உங்கள் இசை நிகழ்ச்சியை நான் ஒரு முறை கூட கேட்டதில்லை; ஒரு நாளைக்கு உங்களைப் பாடையிலே (பாட்டுப் பாடும்போது) பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார் புலவர்.

அதற்கு இசைவாணர், "என்னைப் பாடையிலே

பார்க்க வேண்டுமானால், சாகையிலே வா, பார்க்க லாம்' என்றார், -

அதைக் கேட்ட புலவர், "நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்; சொல் சரியாக அமையாமல் பாடையிலே என்று கூறிவிட்டேன், அதனால் நீங்கள் தவறான பொருள் செய்து கொண்டு, "சாகும்போது வரச்சொல்லி விட்டீர்களே! என்று வருந்தினார் புலவர்.

'இல்லை, இல்லை, சாகையில் வசிக்கு இடத்தில் வரச் சொன்னேன்’’ எ ன் றா இசைவாணர்.

o