பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல்

அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களிலும், நகரங்களிலும் புலவர், வித்து வான், கவிஞர் என்ற பெயரில் பலர் இருந்திருக் கின்றனர். அவர்கள் கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோ படித்தவர்கள் அல்லர்.

புராணங்களையும், காவியங்களையும், இலக்கண இலக்கியங்களையும் தாங்களாகவே படித்து புலமை பெற்றவர்கள், புகழும் அடைந்தார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் காணும்போது தங்கள் புலமையைக் காட்டிக் கொள்வது உண்டு.

அவர்கள் பத்திரிகை எழுத்தாளர்கள் அல்ல!

அத்தகைய புலமையாளர்களின் பேச்சுக்களில் சொற் குற்றம் பொருள் குற்றம் காண்பது அரிது.

அவற்றை கேட்கும்போதும் படிக்கும்போதும் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும்.

பல பக்கங்கள் உடைய கதைகளைப் படிப்பதைக் காட்டிலும் ஒன்று இரண்டு வரிகளில் புலவர்கள் சொல்லும் முத்துப் போன்ற சொற்களைக் கேட்கும்போது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.