பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

意剑 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

49

தட்டு அங்கேயா இங்கேயா?

குறுநில மன்னரைக் காணச் சென்றார் ஒரு புலவர். அவர் பாடிய பாடலைக்கேட்டு மகிழ்ந்தார் மன்னர். புலவருக்கு விருந்து அளித்தார். அதன் பின், வெள்ளித் தட்டில், வேட்டி, பட்டு, பழங்கள், ரூபாய் முதலானவற்றை வைத்து புலவருக்குப் பரிசு அளிக்கச் செய்தார் மன்னர்,

புலவர் மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். ஆனால் அப்போது, அந்த வெள்ளித் தட்டின்மீது ஆசை உண்டாயிற்று அவருக்கு. மன்னரிடம், தட்டு இங்கேயா? அங்கேயா?” என்றார் புலவர். -

புலவரின் கருத்தை அறிந்த மின்னர் தட்டு அங்கேயே! தட்டு என்பதை தாம்பாளம் என்று சொல்வதும் உண்டு. தட்டு என்பதற்குத் தட்டுப் பாடு வறுமை என்ற பொருள் உண்டு. - -

"தட்டு தங்களுக்கா? அல்லது எனக்கா? என்ற பொருளில் புலவர், அங்கேயா? இங்கேயா? என்று சுருக்கமாகக் கேட்டார் "தட்டுப்பாடு தங்களுக்கே என்று நயமாகக் கூறினார் மன்னர்.