பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

முல்லை பிஎல். முத்தையா 53

'தம்பி, நான் சொல்வதைச் சரியாகப் புரிந்து கொள், ஒதுவது ஒழியேல் என்றார் புலவர். சிறுவன் புரியாமல் விழித்தான். நான் சொன்ன பிறகும்கூட உட்கார்ந்திருக்கிறாயே? உடனே, ஒதுவது ஒழி, அம்மா சொல்வதை ஏல் படிப்பதை

நிறுத்தி, அம்மா சொல்வதை ஏற்றுக்கொள்' என்று விளக்கிக் கூறினார் புலவர்.

莎2

அவர் கூறியதும் இவர் கூறியதும் குறுநில மன்னர் ஒருவரைக் காண்பதற்கு ஒரு புலவர் வந்தார். மன்னர் அப்போது, வயலில் அறுவடை நடைபெறுவதைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். r

புலவர் அங்கேயே சென்றார். வயல் வரப்பு களில் நடந்து பழக்கம் இல்லாதவர், காலில் செருப் பும் இல்லை. தட்டுத் தடுமாறி நடந்தார்.

சிறிது தொலைவில், தடுமாறி நடந்து வரும் புலவரைப் பார்த்து, "புலவரே! கணிகையர் போல் நடிக்கிறீரே?’ என நகைச்சுவையாக கூறினார் மன்னர், -

‘‘அங்கே என்ன அறுத்துக் கட்டுகிறதோ?” என்றார் புலவர். -

"கணிகையர் போல்’ என்பது, வரப்பில் நடந்து பழக்கம் இல்லாதது தாசியின் நடிப்புப் போல் என்பது மற்றொரு பொருள்.