பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

5認 . புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

莎器

இரண்டும் பறக்கின்றது

இரண்டு புலவர்கள், வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு புலவர் தட்டார் இனத்தவர்; மற்ற புலவர் பிள்ளை இனத் தவர். . . -

அப்போது திண்ணைக்கு வெளியே தட்டான் ஒன்று பறந்தது. • ,

அதைப் பார்த்ததும், அதோ தட்டான் பறக் கிறது பாரும்!” என்றார் பிள்ளை இனப் புலவர்.

தட்டானுடன் அதன் குஞ்சும் பறந்ததைப் பார்த்ததும், “அதோடு பிள்ளையும் பறக்கிறது, பாரும்!” என்றார் தட்டார் இனப் புலவர்

(தட்டான்' என்பது ஒருவகைப் பூச்சி; பிள்ளை’ அதன் குஞ்சு') -

を59 பாலும் கசந்ததோ?

வயதான புலவர் ஒருவர் நோய்வாய்பட்டு படுத்தபடியே கிடந்தார். அவருடைய மகன் பணி விடை செய்து வந்தான்.

புலவரால் உணவு உட்கொள்ள இயலவில்லை.