பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

so புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் "தலைவிதி வசம் - ஊழ்வினையின் பயன். இவ்வாறு பொருள் கொள்ளலாம்.

என் தலைவி திவசம்’ என் மனைவி திவசம், சிரார்த்தம்; இறந்தோருக்கு வருடம் ஒரு முை செய்யும் ஒரு கிரியை. .

61 பனிக்காலம் கொடிது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

அவர்களும் ஆறுமுக நாவலர் அவர்களும் ஒரு சமயம் சந்தித்துக் கொண்டனர். அப்போது பனிக்காலம்.

"பனிக்காலம் மிகவும் கொடியது' என்றார் ஆறுமுக நாவலர்.

  • பனிக்காலம் நன்று’ என்றார் பிள்ளை அவர்கள்.

இருவருடைய மாணவர்களிடையே, கொடிதே' ‘நன்றே என வாக்குவாதம் உண்டாயிற்று.

அதை அறிந்த பிள்ளை அவர்கள், 'நாவலர் அவர்கள், கூறியதை, நான் மறுத்துக் கூற வில்லையே. பனிக்காலம் நன்று பணியைக் காட்டிலும் ஆலம் (நஞ்சு) நல்லது பனிக்காலம் அவ்வளவு கொடியது.’ என்றுதானே அழுத்தமாகக் சொன்னேன்' என்றார். - . -

வாதிட்ட இருதரப்பு மாணவர்களும் தலை கவிழ்ந்தனர். - -